கோவையில்....
>> 19 December 2009
வணக்கம்,
நீண்ட நாட்களாகிவிட்டது.உங்களோடு பேசி சந்தித்து.கடந்த பத்து நாட்களாக கோவை சென்றிருந்ததால் உங்கள் தொடர்பு அற்றது. கோவை பேரூர் சாந்தலிங்க கல்லூரியில் கடந்த பத்து நாட்களாக தொல்காப்பியம் தொடர்பான பயிலரங்கினைச் சாந்தலிங்கம் கல்லூரியும்,செம்மொழி உயராய்வு மையமும் இணைந்து நடாத்தினர்.அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன்.வேறு பட்ட சூழல் பத்து நாட்கள் நன்றாகவே சென்றது.55 பேர் கலந்து கொண்டோம்.
அக்கா என்ற அன்புமொழி அழைப்புடன் சாந்தலிங்க கல்லூரி பெண்கள் விடுதியில் அடியெடுத்து வைத்தேன்.சுமார் 100 பெண் குழந்தைகளுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார்கள்.எத்தனைப் பெரியவர்களாக இருந்தாலும் பாசத்தோடு அக்கா என்று விளிக்கும் மரபு அங்கு காணப்பெறுகின்றது.பள்ளியில் இருந்து கல்லூரி போகும் பெண்பிள்ளைகள் வரை அங்கு தங்கியிள்ளனர்.
ஞாயிறு தன் கதிர் பரப்பா பனி பொழிந்த 7ஆம் திகதியின் காலை வேளை அக்கா எழுந்திரிங்க நேரமாகிவிட்டது என்று கூவியப்படியே மணியடித்து எழுதப்பிய சத்தம் கேட்டு கண்விழித்தேன்.அப்பொழுது நேரம் 5 மணி.
புதிய இடம் என்றதால் இரவு சரியாக உறக்கம் வரவில்லை.காலையில் கொஞ்சம் கண்மூடினேன்.சத்தம் கேட்டு எழுந்துவிட்டேன்.சின்ன குழந்தைகள் எல்லாம் அப்பனிபொழியும் காலை வேளையில் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு 6 மணிக்கெல்லாம் இறைவழிப்பாட்டிற்கு வந்துவிட்டனர்.
பத்தி தமிழ் மணம்(தேவாரப்பாடல்கள்) எங்கும் கமழ்ந்து மணம்பரப்பும் கலைவேளை என்னால் பச்சைத் தண்ணீர்ல் குளிக்க முடியவில்லை சுடுதண்ணீர் வேண்டும் என்றேன் கொடுத்தார்கள்(நமக்கு அப்படி பழகிவிட்டது வேறு என்ன செய்ய முடியும்)
விடுதி சுமாராக இருந்தாலும்,அதனைச் சுற்றியுள்ள இயற்கை எழில்,இங்கிருந்த குழந்தைகளின் அன்பான கவனிப்பு என்னை அங்கே கட்டிப்போட்டுவிட்டது.
அவ்விடுதிக்குப் புதிது என்றதால் எல்லா குழந்தைகளும் வந்து அக்கா உங்க பேர் என்ன எந்த ஊர்,எதற்கா இங்கு வந்துள்ளீர்கள் என்று விசாரிப்பு அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்.ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் குட்டிப்பெண் அங்கிருந்து ஓடி வந்து அக்கா உங்களுக்கு இந்த சாப்பாடு பிடுத்திருக்கின்றதா? என்று கேட்டது.ஏன் அப்படி கேட்கிறா
ய் என்றேன்.இல்லை என்று சிரித்தால்.அன்று பொங்கல் அவளுக்கு பிடிக்காதாம் அதனால் தான் கேட்டுள்ளாள்.
அந்த சின்ன குழந்தை அதுவே எல்லா வேளைகளையும் செய்து கொண்டு பள்ளிக்கு கிளம்பி செல்கின்றது.என்னவோ அச்சிறு வயதிலேயே அக்குழந்தை தாய் தந்தையரைவிட்டுப் பிரிந்த படிப்பது மனதிற்குச் சங்கடமாக இருந்தது.
விடுதியாக இருந்தாலும் அது ஒரு குருக்குல கல்வியாகவே இருக்கின்றது.அங்குள்ள எல்லா குழந்தைகளும் பசுஞ்சாணம் எடுத்து கரைத்து தரையை மெழுக வேண்டுமாம்.(அங்கு சிமெண்ட போடப்பட்ட தரையில் கூட சாணம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்)ஒவ்வொரு நாட் மாலையிலும் அடுத்த நாள் சமையலுக்கு வேண்டி வெங்காயம் உறிப்பது காய்கறிகளை நறுக்குவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்க கூடிய குழந்தைகள் அங்கேயே வேலையைப் பார்த்துக் கொண்டு படித்துக் கொண்டு இருக்கின்றனர்.
தொடரும்..........








6 கருத்துரை(கள்):
Thanks for sharing, such an useful and informative post.
பயிலரங்கம் பயனுள்ளவாறு இருந்ததா..?
பயிலரங்கின் விவாதங்கள், கருத்துச்சுருக்கங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே...
நூல்வெளியிட்டார்களா...?
பெரம்பலூர்க்கருத்தரங்க நூலின் பொருளடக்கத்தைத் தாங்கள் முன்பு வெளியிட்டது போல வெளியிடலாமே..
உங்களைப்பற்றி..?
நன்றி குப்பன் அவர்களே....
வாங்க முனைவர் குணா.. பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது.அங்கு நூல்கள் எதுவும் வெளியிடவில்லை...இலக்கணம் தொடர்பான நூல்கள் வழங்கினார்கள்..விவாதங்களை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்ளகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வணக்கம் அண்ணாமலையான் என்ற பெயருடன் அறிமுகமாகியுள்ளீர்கள் வாருங்கள்,நீங்கள் அண்ணாமலையில் எந்த துறையில் பணிபுரிகின்றீர்கள்... உங்கள் வருகைக்கு நன்றி...
கருத்துரையிடுக