Blog Widget by LinkWithin

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்...

>> 16 January 2010



அழைப்பிதழ்

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.

பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

4 கருத்துரை(கள்):

குப்பன்.யாஹூ 17 ஜனவரி, 2010 12:17 pm  

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

உங்களின் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள் மேடம்.

குப்பன்_யாஹூ

சரவணன். ச 17 ஜனவரி, 2010 12:42 pm  

வனக்கம் முனைவர் கல்பனாசேக்கிழார்
சந்தோசமா இருக்கு நம்ம பல்கலைக்கழகத்த சேர்ந்த ஒருவரோட பிளாக்கை பார்க்க.
நான் உங்க தமிழ் துறைக்கு மேலே உள்ள ஆங்கிலத்துறையில் முதுநிலை நிரலர்ராக உள்ளேன்.

http://www.cdmsaran.blogspot.com/

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 ஜனவரி, 2010 10:27 pm  

நன்றி குப்பன்....

முனைவர் கல்பனாசேக்கிழார் 17 ஜனவரி, 2010 10:29 pm  

வணக்கம் சரவணன் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...ஆங்கிலத்துறையில் எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகின்றீர்கள்.நான் 6 ஆண்டுக்கு முன் அங்கு படித்தேன்